2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

158 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

George   / 2016 ஜூன் 07 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா, கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 31.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடல் ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், பாறைகளுக்கு நடுவில் பொதிகள் இருப்பதை அவதானித்து அருகில் சென்று பார்த்த போது பொதிகளுக்குள் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட நிலையில், பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X