Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 27 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
இந்தியாவிலிருந்து சுமாமர் 90 கிலோ 519 கிராம் கஞ்சாவை, இலங்கைக்கு கடல்மார்க்கமாக கடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்த விசேட அதிரடிப்படையினர், அவர்களை அச்சுவேலி பொலிஸாரிடம் இன்று திங்கட்கிழமை (27) ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வளலாய் பகுதியிலுள்ள கடற்பரப்புக்கு கடத்தி வரப்பட்ட குறித்த கஞ்சா தொகை, பின்னர் கொழும்பு கொண்டுச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இளவாலை மற்றும் தொண்டமானாறு பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா, 22.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .