2025 ஜூலை 17, வியாழக்கிழமை

26 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். பண்ணைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 26 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று பேரை  கைதுசெய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர் தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 4.55 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது.  
மேலும், இவர்களிடமிருந்து மூன்று புதிய மோட்டார் சைக்கிள்களையும் மூன்று அலைபேசிகளையும் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்று  பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இம்மூவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

இச்சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X