2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'கடத்தியதை இராணுவம் மறுத்தது'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

எனது மகனைக் கடத்தியதை மந்திகை இராணுவம் முகாம் பொறுப்பதிகாரி மறுத்தார். ஆனால் மகனின் சைக்கிளை முகாமுக்கு அருகில் இருந்து மீட்டோம் என மந்திகையைச் சேர்ந்த பரஞ்சோதி என்பவர் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சாட்சியமளித்த ஒருவரே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எனது மகன் பரஞ்சோதி தனஞ்செயன் (கடத்தப்படும் போது வயது 19) கடந்த 2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி இந்திரா அம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இராணுவத்தினர் மகனைப் பிடித்துச் சென்றனர் என்பது மறுநாளே எங்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, மந்திகை இராணுவ முகாமுக்குச் சென்றபோது, முகாமுக்கு அருகில் மகனின் சைக்கிள் நிற்பதை அவதானித்தோம். சைக்கிளைக் காட்டி இது எமது மகனின் சைக்கிள் மகனை நீங்கள் பிடித்துள்ளீர்கள் எனக் கூறியபோது, இராணுவத்தினர் எம்மை அடிக்க வந்தனர். இதன் பின்னர் எங்கு தேடியும் எமது மகன் கிடைக்கவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X