Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சந்தைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் எனது கணவரை வெள்ளை வானில் வந்தவர்கள் அடித்து இழுத்துச் சென்றனர் என உ.நித்தியானந்தன் (கடத்தப்படும்போது வயது 34) என்பவரின் மனைவி சிவரூபி சாட்சியமளித்தார்.
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி எனது கணவர், சந்தைக்குச் சென்று வீடு திரும்பும் போது, பண்டத்தரிப்புச் சந்தியிலுள்ள கலைமகள் வித்தியாலயத்துக்கு முன்பாக வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு ஆகியவற்றை அவ்விடத்திலிருந்து மீட்டோம்.
கணவர் கடத்தப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பண்டத்தரிப்பு இராணுவ முகாமில் இருந்து வந்த இராணுவத்தினர் எனது கணவரிடம் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர் என்றார்.
மேலும்,கணவர் கடத்தப்பட்டமை தொடர்பில், கடந்த 2013ஆம் ஆண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் எங்கள் வீட்டுக்கு வந்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த பொலிஸார், கணவனின் அடையாள அட்டை இலக்கத்தை கேட்டதுடன், கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்துவிட்டுச் சென்றனர். இதுவரையில் எனது கணவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .