2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'கழிவுகள் மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதில்லை'

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“வலிகாமம் பகுதியில் உள்ள பொலித்தீன் கழிவுகள் மீள் சுழிற்சி ஒழுங்கான முறையில் நடமுறைப்படுத்தப்படவில்லை” என, சுகாதார அதிகாரிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

வலிகாமம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

யாழ். மாநகரசபையினை அடுத்து, வலி. தெற்கு பகுதியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மீள் சுழற்சி செய்வதற்கான இயந்திரம் ஒன்று சுன்னாகம் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

வலிகாமம் பகுதியில் உள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழவு பொருட்களை இங்கு மீள் சுழற்ச்சிக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நடைமுறை இதுவரை ஒழுங்கான முறையில் பின்பற்றப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், டெங்கு பரவும் சூழல் அதிகரித்துள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, தரம் பிரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை பிரதேச சபையினர் உரியமுறையில் எடுத்து செல்வதில்லை என்றும், அதனை, கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் வீதியில் இழுத்து கொட்டி விடுகின்றன.

பிரதேச சபையின் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் கவனயீனம் காரணமாகவே, பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்தபடுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு  முன்னால் உரிய முறையில் எடுத்து வைக்கப்படும் கழிவுப் பொருட்களை தினந்தோறும் வந்து பெற்றுச் சென்றால் இவ்வாறான பிரச்சினை ஏற்படாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், வலிகாமம் பகுதியில் உள்ள ஐந்து பிரதேசசபைகளின் செயலாளர்களும் உரிய நடவடிக்கை எடுத்து, நகரப்புறங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X