Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சுள்ளி விறகுகளை பொறுக்கிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உருத்திரேஸ்வரன் விஜயராணி திங்கட்கிழமை (14) 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
எனினும் அவரது பொருளாதார நிலைமை தொடர்பில் கவனத்திற்கொண்ட நீதிமன்ற சமூதாய சீர்திருத்த அதிகாரி, அதனை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 3 மாதகால சமுதாய சீர் திருத்தப்பணிக்குட்படுத்துமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
வனவள பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சுள்ளி விறகுகளை பொறுக்கிய குற்றச்சாட்டில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த நபர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .