2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

‘சேவைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கவும்’

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

“கடந்த காலங்களில் வடமாகாணத்தில் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டபோது புறக்கணித்து ஒதுக்கப்பட்டு வந்த, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரிய உதவியாளர்களை, இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க, வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பாதிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

2005ஆம் ஆண்டு வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, தமக்கான நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அக்காலப் பகுதியில் தாமக்கான நியமனங்கள் அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர், வன்னிப் பகுதிப் பாடசாலைகளில் யுத்த காலம் உட்பட 15 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் சேவையாற்றி வரும் தாம், தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X