2025 ஜூலை 23, புதன்கிழமை

'சந்திரிக்காவுக்கு தெரிந்த பனை மரம் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

பனையின் மூலம் கிடைக்கும் பயன், வருமானம் பற்றி நன்கு அறிந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தில் காலி முகத்திடலில் பனை விதைகளை நாட்டி பனை மரம் வளர்த்தார். ஆனால், பனையுடன் வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் அதுபற்றி அறியாமல் இருகின்றோம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவநேசன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை  வடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சந்திரிக்கா பனையின் பயனை அறிந்து அவ்வாறு செய்தார். ஆனால் மஹிந்த ஆட்சிக் காலத்தில் அந்த பனைகள் அழிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகள் காலத்தில் முல்லைத்தீவில் வடிசாலையொன்று இயங்கியது. அந்த வடிசாலையின் உற்பத்தியை வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். ஆனால் இன்று அதனைக் காணமுடியவில்லை.

விடுதலைப் புலிகள் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் மற்றைய மாவட்டங்களின் கூட்டுறவு சிறப்பாக வினைத்திறனாக இயங்கியது. ஆனால், இன்று கூட்டுறவு வினைத்திறனற்று இருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்கின்ற மழையால் ஏற்படும் நீர் வீணாக கடலுக்குள் செல்கின்றது.அதனைத் தடுத்து அந்த நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல முடியும்.அதற்கான தரைத்தோற்றமானது, இரண்டு மாவட்டங்களுக்கும் இயற்கையாகக் காணப்படுகின்றது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .