2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'டெங்கைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

"யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை தீவிர வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இது குறித்து எமது விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், "யாழ். மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடத்தில் இதுவரையில் 512 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

கடந்த வருடத்தைப் பொறுத்த வரையில், 33 நோயாளர்களே இனங்காணப்பட்டனர். இந்த வருட ஆரம்பத்திலேயே பல மடங்கு அதிகரித்திருப்பது மிகுந்த ஆபத்தான சூழ்நிலையையே காட்டுகிறது.

நாட்டில் உள்ளூராட்சி சபைகள் மக்கள் பிரதிநிதிகளற்ற நிலையில் செயற்படுகின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்ற சூழலில், மேற்படி டெங்கு போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில், எமது மக்களின் நலன் கருதி, அதிகாரிகள், அக்கறை எடுத்து தீவிர செயற்பாடுகளையும், விழிப்புணர்வு திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து வடக்கு மாகாண சபை நிர்வாகம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். எனினும், அது சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியான நிலையில், எமது மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வு பெற்று செயற்பட முன்வரவேண்டும் என்பதுடன், டெங்கு நோயைக் பட்டுப்படுத்தக்கூடிய சுய ஏற்பாடுகளையும் சமூக நலன் கருதி மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X