Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
தென்னை பயிர்செய்கை சபையினால் வழங்கப்படும் மானியங்களை பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தென்னை பயிர்செய்கை சபையின் வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
தென்னை பயிர்செய்கை சபையினால் பல்வேறு மானியத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக புது மரநடுகை, புனரமைப்பு என்பவற்றுக்கு தென்னை கன்றுகளை மானியமாக வழங்குவதோடு, ஊடுபயிர்செய்கைக்கு ஏக்கருக்கு பதினையாயிரம் ரூபாய் வீதம் 5 ஏக்கர் தொடக்கம் 50ஏக்கர் வரை பெற்றுகொள்ள முடியும்.
இதேவேளை வரட்சியை தாங்குவதற்காக மண், நீர் பாதுகாப்பு, தென்னை மட்டை குழி என்பவற்றுக்கும் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றது. உரம் பயன்பாட்டுக்கு ஒரு மரத்திற்கு 55 ரூபாய் வீதம் எத்தனை மரங்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை வடபகுதியில் மக்னீசியம் குறைபாடு காணப்படுவதனால் டெலமைற் பசளை மானியம் வழங்கப்படுகிறது.
அத்தோடு விலங்கு வளர்ப்பு மானியம், அதாவது 1 மாடு வளர்ப்புக்கு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. நீர்ப்பாசனம்; ஒரு ஏக்கருக்கு மானியமாக 8,000 ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பல மானியத்திட்டங்களுடன் தென்னை பயிர்செய்கை சபை செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் மக்கள் இந்த மானியத்திட்டங்களை பெற்று தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளவதாக தெரியவில்லை. தென்னை பயிர்செய்கையை மேற்கொள்கின்றவர் தனது சொந்த பணத்தில் செலவு செய்யாது இவ்வாறான மானியங்களை பெற்று தென்னை பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும். என தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள தென்னை பயிர்செய்கையாளர்கள் பிராந்திய கமநல சேவை நிலையங்களில் உள்ள உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் வழங்கப்படுகின்ற மானியத்திட்டத்திற்கு 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் முதற்கட்டமாக 200 பயனாளிகளுக்கு 2.5 மல்லியன் ரூபாய் மானியம், கடந்த வியாழக்கிழமை (26) வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago