Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
“மக்களை விரக்தி நிலைக்குத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதை, நல்லாட்சி என்று சொல்ல முடியாது. இது நாட்டுக்கும் நல்லதல்ல. இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்” என, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்தாலும், அவற்றை மீறியே செயற்பட்டு வருகின்றது” என்றும் குறிப்பிட்டார்.
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், புதன்கிழமை (22) இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“வட- கிழக்கு மாகாணங்களில் மட்டும் 67 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக படையினரிடம் நிலங்களை ஆக்கிரமதித்து வைத்திருக்கின்றனர். இவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் தனிநபருக்குச் சொந்தமானவை. இவற்றைவிட கடற்படை விமானப்படையிடமும் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் இருக்கின்றன. இவற்றை விடுவித்தால் தான் மக்கள் மீளக்குடியமர முடியும்.
அவ்வாறு ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்து மக்களைக் குடியேற்றி அவர்களது வாழ்வை வளப்படுத்த வேண்டியது அவசியம். இதனைவிடுத்து, சொந்த மண்ணைவிட்டு மக்களை விரட்டுவதென்பது அவர்களைச் சாகடிப்பதற்குச் சமனானது. மக்களுடைய ஒவ்வொரு அங்குலக் காணிகளும் அவர்களுக்கே சொந்தமானது. அவை ஒருபோதும் படையினருக்குச் சொந்தமாகாது. மக்களுக்கு சொந்தமான காணியை அவர்களும் அபகரிக்க முடியாது” என்றார்.
இதேவேளை, மக்களுடைய காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் ஐ.நாவுக்கு வாக்குறுதி அளித்திருந்தது.ஆனால், அதனை மீறியிருக்கின்ற இலங்கை அரசாங்கம் மக்களது காணிகளையே தொடர்ந்தும் கபளீகரம் செய்துவருகின்றது.
எனவே, வட- கிழக்கில் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் தற்போது போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். அவ்வாறு மக்களின் காணிகள் மக்களிடமே ஒப்படைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வழங்கியிருக்கின்ற உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago