2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'தொழில்நுட்ப பிரச்சினையால் கணக்குகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை'

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக வட மாகாண சபையின் அமைச்சுக்களின் கணக்குகள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (30) நடைபெற்ற வட மாகாண சபை அமர்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அமைச்சின் கணக்குகள் ஒவ்வொரு மாதம் முடிவடைந்து, அடுத்த மாதத்தின் 12ஆம் திகதிக்கு முன்னர் பதிவேற்றம் செய்யப்படுவது வழமையாகும்.

ஆனால், ஏன் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து கணக்குகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X