2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நெடுந்தீவு சிறுமி கொலை விவகாரம்; விளக்கத்தைக் கொடுக்கவும்

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சில இணையத்தளங்களில் வெளியாகிய செய்திகள் தொடர்பாக மீண்டும் ஒருமுறை விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் (உதயன்) தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர்  செவ்வாய்க்கிழமை(29) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிருபா என்ற சந்தேக நபருடன் நானோ அல்லது எனது கட்சியோ இன்று வரையும் எந்தவிதமான தொடர்புகளையும் பேணியிருக்கவில்லை என்பதை நான் பல ஆதாரங்களுடன் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

எனினும் குறிப்பிட்ட இணையத்தளம் மீண்டும் குறிப்பிட்ட சந்தேக நபரை என்னுடன் தொடர்புபடுத்தி செய்தி எழுதுவது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்லாது எனது அரசியல் சார் நடவடிக்கைகளுக்கும் பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறித்த இணையத்தின் இயக்குனர் குறிப்பிட்ட ஒரு கட்சி சார்பானவராக இருப்பதால் எனது பெயரை தொடர்ந்தும் அக்கொலையுடன் தொடர்புபடுத்தி எழுதுவது அவரது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கென எனக்குப் புரியவில்லை.

சட்ட ஒழுங்குகள் முறையான ஒழுங்கில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், உண்மையும் நீதியும் விரைவில் வெளிவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X