2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'நாடாளுமன்றத்தை சுற்றிப்பார்த்தவர்களில் எனது மகளும் இருந்தார்'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் நாடாளுமன்றத்தைச் சுற்றிப்பார்த்தார்கள் என 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி பத்திரிகையொன்றில் வெளியாகிய படத்தில் எனது மகளும் இருந்தார் என வைரவநாதன் மகேந்திரன் என்பவர் கூறினார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (14) நடைபெற்றது. இதன்போதே, தந்தையொருவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

'எமது மகளுடன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஓமந்தையூடாக வெளியேறினோம். மகேந்திரன் நதியா (காணாமற்போகும் போது 19 வயது) சனநெரிசலில் தவறவிட்டோம். எனது மகள் எங்கு இருக்கின்றார் என்பதை அறிய 34 முகாம்களுக்கு கடிதம் எழுதியும் பயனில்லை.

இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியாகிய பத்திரிகையொன்றில், நாடாளுமன்றத்தை பார்வையிட்ட 104 புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகள் என்ற செய்தியில் பிரசுரமாகிய புகைப்படத்தில் எனது மகளும் காணப்பட்டார்.

அதில் என் மகளுடன் இருந்து 2 பேரை அடையாளப்படுத்தி, அவர்கள் விடுதலை பெற்றதும் அவர்களிடம் சென்று எனது மகள் பற்றிக் கேட்டேன். தாங்கள் தகவல் சொன்னால் தங்களுக்குப் பிரச்சினை வந்துவிடும் என்பதால் எந்தத் தகவலும் வழங்கமாட்டோம் என அந்த இரண்டு பெண்களும் கூறினர். அவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து வாழ்கின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X