2025 ஜூலை 16, புதன்கிழமை

நகருக்குள் வரும் இ.போ.ச பஸ்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகருக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (19) முதல் இ.போ.ச பஸ் சேவை இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கருகில் பஸ் நிலையம் அமைந்திருப்பதன் காரணமாக, முல்லைத்தீவு நகரின் உட்பகுதிக்கு பஸ்கள் வருகை தருவதில்லையென முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழுவினர், முல்லைத்தீவு மாவட்டச் செயலருடனான சந்திப்புகளில் முறைப்பாடு தெரிவித்துவந்தனர்.

போர், ஆழிப்பேரலை அழிவுகளுக்குப் பின்னர் அபிவிருத்தி கண்டுவரும் முல்லைத்தீவு நகரில் மக்கள் கூடும் இடத்திலிருந்து பஸ்கள் பயணத்தை தொடங்காததால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, நகருக்குள் வருகைதந்து மக்களை ஏற்ற வேண்டுமென்ற நகர அபிவிருத்திக்குழு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இ.போ.ச பஸ்கள் முல்லைத்தீவு நகருக்குள் வருகைதந்து மக்களை ஏற்றிச்செல்வதாக நகர அபிவிருத்திக் குழு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு பஸ் நிலையம் முல்லைத்தீவு நகரின் மத்தியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X