2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நடேஸ்வரா கல்லூரியின் மூன்று கட்டடங்கள் இல்லை

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி தற்போது கற்றல் செயற்பாட்டுக்காக அனுமதிக்கபட்டுள்ள நிலையில், கல்லூரியின் மூன்று கட்டங்கள் முற்றாக இடிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் கனிஸ்ட வித்தியாலயம் 26 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் வியாழக்கிழமை (02) ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இக்கல்லூரியினை தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமான மாவை.சேனாதிராசா சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

குறித்த இரு பாடசாலைகளும் எதிரெதிரே அமையப்பெற்றுள்ளது. இதில் நடேஸ்வராக் கல்லூரியின் மூன்று கட்டடங்கள் முற்றாக அழிவுற்ற நிலையில் வெறும் நிலப்பரப்பாக உள்ளன.

இந்த மூன்று கட்டடங்களும் அடுக்குமாடிகளாக இருந்ததெனவும் இது போன்று கனிஷ்ட வித்தியாலய வளாகத்தில் இக்கல்லூரியின் ஆரம்பமாக இருந்த சிறிய குடில் போன்ற கட்டிடமும் அழிவுற்றுள்ளதாகவும் இங்கு மாணவர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட பாடசாலை ஆலயத்தின் காளி அம்மன் விக்கிரகம் அகற்றப்பட்டு, பிள்ளையார் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அனுமதிக்கபட்ட காணிப்பரப்புக்கு அப்பால் பாடசாலையின் காணி உள்ளது. இந்நிலையில் எஞ்சிய கட்டடத்தை சீர் செய்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக கனிஷ்ட பிரிவும் மேல் பிரிவும் ஒரே வளாகத்தில் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X