Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 02 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கின்ற ஆண்டாக 2016ஆம் ஆண்டு மலரவேண்டும். அதற்கான செயற்பாடுகளுக்கு நீதித்துறை எப்போதும், துணை நிற்கும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ். நீதிமன்ற ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே வெள்ளிக்கிழமை (01) அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், 'அரச உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். உத்தியோகத்தர்கள் கடமையில் கரிசனை செலுத்த வேண்டும். நீதிச் சுதந்திரம் மிக முக்கியமானது, அந்த கடமையினை அனைவரும் இணைந்து செய்வோம்.
யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள, போதைவஸ்துக்கள் இல்லாத, பாடசாலை மாணவிகள், பெண்கள் ஆகியோரை பாதுகாக்கும் மாவட்டமாக மாறவேண்டும். ரௌடித்தனம், காடைத்தனம் அழிக்கப்பட்டு, குற்றச் செயல்களையும் ஒழித்து சமாதானமான சுதந்திரமான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு நீதித்துறை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குற்றம் இல்லாத, சமாதானமான மாவட்டமாக மலரும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவோம் என அவர் மேலும் கூறினார்.
7 minute ago
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
3 hours ago