Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தென்பகுதி கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கடற்பாதுகாப்பு அங்கி, வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படாமையினாலேயே அனர்த்தங்களின்போது கடற்றொழிலாளர்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் வே.தவச்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்,யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி அங்கிகளையும் திணைக்களம் வழங்காது தற்போதும் அலுவலகத்திலேயே வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். கடற்றொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். இத்தகைய பாதிப்புக்கள் தொடர்பாக பல தரப்பினர்களிடத்திலும் மீனவர்கள் முறையிட்டு இருக்கின்றனர். ஆனால், இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இந் நிலையிலேயே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது கடற்றொழிலாளர்கள் பலரும் தமது உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த மக்களை யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பல்வேறு அனர்த்தங்கள் தாக்கியபோதும் மீண்டும் அவர்களை இயற்கையும் தாக்கியுள்ளது.
இந் நிலையில் நேற்றைய தினம் கூட பருத்தித்துறைப் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தமொன்றில் இரண்டு மீனவர்கள் அந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் ஒரு மீனவர் கரையிலிருந்து மீனவர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.
இதே போன்று தொண்டைமனாற்றுப் பகுதியில் அதே தினம் மீனவரொருவரின் படகு கவிழ்ந்து அந்த மீனவர்களும் கரையில் இருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டதுடன் அவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் அனைத்தும் உடைந்து சேதமாகியுள்ளன.
இதனைவிட நெடுந்தீவுப் பகுதியிலும் அண்மையில் படகொன்று விபத்துக்குள்ளாகி அப்பிரதேச கடற்தொழிலாளர்கள் மட்டுமட்டாக உயிர் தப்பியுள்ளனர். இவ்வாறு அவர்கள் இறப்பதற்குப் பிரதான காரணம் கடற்பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படாததாகும். ஆனால் தென்பகுதியில் இந்த கடற்பாதுகாப்பு கவசங்கள் அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் யாழ். மாவட்டத்தில் ஒரு தொகுதி நீரியல் வளத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு தொகுதியைக் கூட கடற்தொழில் திணைக்களம் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. அவ்வாறு வழங்காது அதனை கடற்தொழில் திணைக்களாதத்திலேயே வைத்திருக்கின்றனர். ஆனால், அதனை வழங்கியிருந்தால் தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
இவ்வாறு திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல் காரணமாக இந்த மீனவர்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
20 minute ago
23 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
52 minute ago