Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 18 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஸன்
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் கூட்டமைப்பு விவாதிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'புதிய அரசியல் சானத்தைக் கொண்டு வருவது தொடர்பாக இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அது டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது விவாதிக்கப்படவில்லை. ஏனென்றால், Nஐ.வி.பி என்றக் கட்சி, அந்த அறிக்கை தொடர்பாக தங்களது கட்சிக்குள் பேசி முடிவெடுக்க வேண்டுமென்று கேட்டதால், அது நாடாளுமன்றுக்கு கொண்டு வரப்படவில்லை.
அதன் பின்னர், கடந்த ஐனவரி மாதம் கொண்டு வரப்படுவதாக இருந்த நிலையில், சு.க, தானும் விவாதிக்க வேண்டி இருப்பதாக கூறியதால், அது இப்போது பெப்ரவரி மாதத்துக்கு கொண்டு வருவதென குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால், இது தொடர்பான எந்தவொரு விவாதத்தையும் கூட்டமைப்போ அல்லது தாய் கட்சி என்று கூறுகின்ற தமிழரசுக் கட்சியோ நடத்தவில்லை. இது தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய முக்கியக் கட்சி கூட்டமைப்பு தான். ஆனால் அவர்கள் இதுவரையில் விவாதிக்கவில்லை' என்று கூறினார்.
அதே நேரம், சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, Nஐ.வி.பி போன்ற கட்சிகள் இதனை தமது கட்சிக்குள் விவாதித்திருக்கின்றன. ஆனால், கூட்டமைப்பு விவாதிக்கவும் இல்லை, அதில் என்ன என்ன விடயங்கள் இருக்கின்றன என்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்தவில்லை என்பது மிகக் கவலையான விடயம்.
ஆனால், இவை அவ்வாறு இருந்த போதிலும் கூட, சில விடயங்களைப் பார்க்கின்ற போது, வடகிழக்கு இணைப்பு இல்லை என்று அரச மட்டத்தில் உறுதியாக சொல்லபப்பட்டிருக்கின்றது. இதனை சம்பந்தன் மற்றும் சுமந்திரனும் கூறியிருக்கின்றனர். அதே போன்று, ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து மாற்றமில்லை என்பதையும் இலங்கை அரசின் சகல தரப்புக்களும் தெளிவாக கூறியிருக்கின்றது. அதனையும் தமிழரசுக் கட்சியின் சம்பந்தன், சுமந்திரன் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்ற விடயங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்த முடிவுகளை சம்மந்தன், சுமந்திரன் அறிவிக்கின்ற போது, அது கூட்டமைப்பின் முடிவல்ல. இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது, அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளையோ அழைத்துப் பேசவில்லை. அது மாத்திரமல்லாமல் கடந்த ஒருங்கிணைப்புக் குழு, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்றும் சொல்லியிருக்கின்றோம். ஆனால், இவை எவையும் கவனத்தில் எடுக்கப்படாமல், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்கின்ற வகையில் அமையப்பெறும் அரசியல் சாசனத்தை, எமது கட்சியான ஈபிஆர்எல்எப் நிராகரிக்கின்றதென்பதையும்; தெளிவாகக் கூறுகின்றோம்' என்றும் அவர் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் சார்ந்த விடயங்களாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு சார்ந்த விடயங்களாக இருக்கலாம். இந்த விடயங்களை சம்பந்தன், சுமந்திரன் என ஓரிருவர் சார்ந்து எடுப்பது தமிழ் மக்களுடைய எதிர்காலத்தை பாதிக்கின்ற சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. ஆகவே, நாங்கள் ஒரு கோரிக்கையை சம்பந்தரிடம் முன்வைக்கின்றோம். அதாவது, தயவு செய்து நீங்கள் எடுக்கின்ற முடிவுகளை தமிழரசுக் கட்சி முடிவுகளாக எடுங்கள். அதனை கூட்டமைப்பு முடிவாக தெரிவிக்காதீர்கள். மேலும் கூட்டமைப்புடன் கலந்து பேசாது அவ்வாறான முடிவுகளை எடுப்பது தவறான நடவடிக்கை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
13 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago