Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
மீள்குடியேறிய மக்களுக்காக அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் திட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருத்துகை வீடு வேண்டுமா என்பது தொடர்பில் கருத்துக்கள் அறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத்திட்டத்தில், ஒவ்வொரு வீடும் 2.1 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் எமது மக்களுக்கு பொருத்தமில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இந்தத் தொகைக்கு எமது மக்கள், தங்களின் வசதிக்கேற்ப தங்கள் வழமையாக கட்டும் விதத்தில் 3 வீடுகளை அமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மீள்குடியேற்ற அமைச்சு, தற்காலிகமாக அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதுடன், கோப்பாய் பிரதேசத்தில், மேற்படி வீட்டுத்திட்டத்தில் கூறப்பட்டதைப் போன்று ரெடிமேட் வீடு ஒன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.
இந்த வீடு அமைக்கப்பட்ட பின்னர், இதனை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள், மற்றும் பிரதிநிதிகள் அங்கு சென்று அதனைப் பார்வையிட்டு, அதன் பின்னர் முடிவுகளை அறிக்கை மூலம் சமர்ப்பிக்குமாறு அமைச்சு கோரியுள்ளது. அதன் பின்னர் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் பரிசீலனைப்படுத்தும் என அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வீட்டுத்திட்டமானது கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago