2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'பாரிய படைத்தளத்திலிருந்து எவ்வாறு ஒருவர் தப்பிக்க முடியும்?'

Menaka Mookandi   / 2016 மார்ச் 01 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கச்சாய் படைத்தளம், பாரிய படைமுகாமாக இருந்தது. அந்தப் படைத்தளத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்க முடியும்? கச்சாய் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சில்வா, தங்களை முட்டாளாக்கினார் என காணாமற்போன பொன்னுத்துரை மகாதேவனின் சகோதரரர் மனோகரன், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், இன்று சாட்சியமளித்தார்.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் அமர்வின் போது தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது,

'தென்மராட்சியை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர், வன்னியிலிருந்து வருபவர்கள் அருகிலுள்ள இராணுவ முகாமில் பதியவேண்டும் என்ற நடைமுறை வந்தது. 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி எனது சகோதரர் வன்னியில் இருந்து வந்து, இராணுவ முகாமுக்குப் பதியச் சென்றார்.

இதன்போது, இராணுவத்தினர் எனது சகோதரரைப் பிடித்தனர். நான் சென்று கேட்டபோது, பிற்பகல் 4 மணிக்கு சகோதரனை விடுவதாக அந்த முகாமுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி கேணல் சில்வா கூறினார். 4 மணிக்குச் சென்ற போது, மறுநாள் விடுவதாகச் சொன்னார்கள். மறுநாள் சென்ற போது, அங்கு நின்ற புலனாய்வாளர்கள் மங்கள என்பவர், உங்கள் சகோதரன் முகாமில் இருந்து தப்பித்து புலிகளிடம் சென்றுவிட்டார் என்றார். ஆனால் தம்பி தப்பிக்கவில்லை.

பாரிய படைத்தளமாக அப்போது கச்சாய் இருந்தது. அங்கிருந்து எப்படி ஒருவர் தப்பிக்க முடியும்?. இது முட்டாள்களுக்கு சொல்லும் கதை. அதைத்தான் இராணுவம் எமக்குச் சொல்லியுள்ளது. கச்சாய் முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த சில்வா 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பூந்தோட்டம் முகாமில் அதிகாரியாக இருந்தார்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X