2025 ஜூலை 23, புதன்கிழமை

'புலிகளின் காவல்துறை உறுப்பினர் எனது கணவரை காட்டிக்கொடுத்தார்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வட்டுவாகலால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் போது, இராணுவத்தினருடன் இணைந்து நின்ற விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய சபேசன் என்கின்ற நபர் தனது கணவரைக் இராணுவத்தினருக்கு காட்டிக் கொடுத்ததாக காணாமற்போன விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வண்ணக்கிளி என்று அழைக்கப்படும் மூத்தம்பி விஜயகுமார் என்பவரின் மனைவி இளவெயினி சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, இவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வட்டுவாகலால் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழையும்போது, காட்டிக் கொடுக்கப்பட்டு எனது கணவரை 3 இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். அதன்பிறகு அவர் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .