2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கும் கிணறுகள்

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து செவ்வாய்க்கிழமை (30) விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் இரண்டு பாரிய கிணறுகள் பாழடையாமல் பாவிக்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றன.

வலிகாமம் வடக்கு பகுதியில் விடுவிக்கப்பட்ட 468.5 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்காக மக்கள் புதன்கிழமை (30) ஆர்வமாக அங்கு சென்றனர்.

தையிட்டி பகுதியில் 1990ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் 2 பாரிய கிணறுகள் காணப்பட்டன. தையிட்டி கடற்கரையை அண்டிய பிரதேசம் என்பதால் அனைத்தும் உவர் நீர் கிணறுகளாக இருந்த நிலையில் இந்த இரண்டு கிணறுகள் முழுக்கிராமத்துக்கும் குடிநீர் வழங்கியது.

இந்தக் கிணறுகளைச் சுற்றி பாதுகாப்பு போடப்பட்டு, இரண்டு காவலாளிகள் பாதுகாப்புக்காக கடமைக்கு அமர்த்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

25 வருடங்கள் கடந்து மீண்டும், அங்கு சென்ற போது, அந்தக் கிணறுகள் அதேநிலைமையில் இருக்கின்றன. கிணறுகளை துப்பரவு செய்யத பின்னர் அதனை மீண்டும் குடிநீருக்குப் பயன்படுத்த முடியும்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளின் கிணறுகளை துப்பரவு செய்வதற்கு அரசாங்கம் உதவி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X