2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'பசுபிக் ஏஞ்சல் 2016' மருத்துவ முகாம்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை - அமரிக்கா அரசாங்கங்களுக்கு இடையிலான நட்புறவினை மேலும் அதிகரிக்கும் வகையில், பசுபிக் ஏஞ்சல் - 2016 மருத்துவ முகாமொன்று, யாழ்ப்பாணம் - இடைக்காடு மத்திய மகா வித்தியாலயத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை விமானப்படை, பசுபிக் விமானப்படை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன இணைந்தே, இந்த மருத்துவ முகாதை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், இம்முகாமினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில், பசுபிக் விமானப்படையின் மருத்துவ குழு, இலங்கை விமானப் படையினரின் வைத்திய நிபுணர்கள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டு, மருத்துவ உதவிகளை வழங்கினர்.

கண், காது, இயன்முறை மருத்துவம் (பிசியோ தெறப்பி) மற்றும் பொது மருத்துவச் சிகிச்சைகள், இதன்போது வழங்கப்படுகின்றன. அத்துடன், கண்பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் ஊட்டச்சத்து குறைந்த சிறுவர்களுக்கு சத்துமாக்களும், வயோதிபர்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகள் என்பனவும் இதன்போது வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாம், இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரம் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், சிறுவர் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X