2025 ஜூலை 19, சனிக்கிழமை

71 பனை மரங்களை வெட்டிய மூவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மிருசுவில் பகுதியில் அனுமதியின்றி 71 பனை மரங்களை வெட்டிய மூவருக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

மிருசுவில் பகுதியில் கடந்த டிசெம்பர் மாதம் 71 பனை மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த மூவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நீதவான் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X