2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பஸ்களுக்கு இரும்பு வலை

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன.

பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களிலிருந்து பஸ்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், இலங்கை போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய சேவைக்குச் சொந்தமான 57 பஸ்கள் மீது கல், போத்தல் மற்றும் இதர பொருட்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை(01) இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சபையினரால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, அமைச்சர்கள், பொலிஸ் மற்றும் பல தரப்பினருக்கு மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவங்களிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பஸ்களுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X