2025 ஜூலை 16, புதன்கிழமை

'முகாம்களில் வைத்து குடும்பத்திலுள்ள மூவரைக் காணவில்லை'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியாவிலுள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எனது அண்ணா, தம்பி மற்றும் மச்சான் ஆகியோர் 3 நாட்கள் இடைவெளியில் முகாம்களில் இருந்து காணாமற்போனார்கள் என சி.சரோஜினி என்ற பெண் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்றது. இதில் சாட்சியமளித்தபோதே இவ்வாறு கூறினார்.

எனது அண்ணா சி.லோகநாதன் வன்னியில் கடை நடத்தினார். தம்பி சி.செந்தில்நாதன் மற்றும் மச்சான் உ.குணாளன் கடையில் உதவியாக நின்றனர். இறுதி யுத்தத்தின் போது, தம்பி 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து வவுனியா சைவப்பிரகாச முகாமிலும், அண்ணாவும் மச்சானும் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று, வவுனியா இராமநாதபுரம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி அண்ணாவும் மச்சானும் முகாமில் இருந்து காணாமற்போனார்கள். தொடர்ந்து 3 தினங்களில் கழித்து தம்பியும் முகாமில் இருந்து காணாமற்போனார்கள். இதுவரையில் அவர்கள் பற்றித் தகவல் இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X