Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
எனது மகனின் முகத்தில் இருந்த தழும்புகாக பல தடவை மகனை விசாரணை செய்திருந்த இராணுவத்தினர். இறுதியில் அவரைக் கடத்திச் சென்றனர் என அல்வாய் வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் செல்வவதி சாட்சியமளித்தார்.
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
சுப்பிரமணியம் செல்வராசா (காணாமற்போகும் போது வயது 22) திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தந்தையாவார். கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி, தனது மகனின் பிறந்தநாளுக்காக ஆடை வாங்குவதற்கு நெல்லியடிச் சந்திக்குச் சென்றவரை, நெல்லியடி முடக்காட்டுச் சந்தியில் வைத்து இராணுவத்தினர் பிடித்து பவள் வாகனத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றனர்.
மகன் கைது செய்யப்பட்டதையடுத்து, மறுநாள் எமது வீட்டைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், வீட்டைச் சோதனையிட்டனர். அடிக்கடி வந்து எங்களையும் விசாரணை செய்தனர். இதன் பின்னர் அதே வருடம் ஓகஸ்ட் மாதம் மனித உரிமை ஆணைக்குழுவில் நாங்கள் முறைப்பாடு செய்ததையடுத்து, இராணுவத்தினர் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை.
எனது மகன் சிறுவயதில் விளையாடும் போது, தவறி வீழ்ந்ததில் முகத்தில் தழும்பு ஏற்பட்டது. அந்த தழும்பின் காரணமாக மகனை அடிக்கடி இராணுவத்தினர் அழைத்து விசாரித்தனர். அதற்கான மருத்துவச் சான்றிதழைக் காட்டி, மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதில் இருந்து தடுத்தோம். இறுதியில் அவனைக் கைது செய்துவிட்டனர் என்றார்.
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago