2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'மாணவர்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் அடிபணியக் கூடாது'

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாணவர்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் அடிபணியாது ஒற்றுமையுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு எதிர்காலத்தில் எமது மாவட்டத்துக்கும் இந்த நாட்டுக்கும் சேவை செய்யும் ஒரு நல்ல பிரஜையாக முன்வர வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 250 மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(27) நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

செல்வங்களிலே சிறந்த செல்வம் கல்விச் செல்வம்.அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களும் தமது கற்றல் செயற்பாடுகளில் கூடிய அக்கரை செலுத்த வேண்டும்.

மாணவர்கள் எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும்.இதன்போது தான் இந்த நாட்டில் எதிர்கால சமுதாயம் மிகவும் ஒளிமயமான சமுதாயமாக செயற்படும்.

ஆகவே, மாணவர்கள் கல்வி,கலை,கலாசார நிகழ்வுகளில் ஒற்றுமையுடன் பங்கெடுத்து தமது எதிர்காலத்தை துய்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X