2025 ஜூலை 16, புதன்கிழமை

200 மாணவர்களுக்கு குறிப்புப் புத்தகம் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

2015ஆம் ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள், பாடசாலைகளில் தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்த வருடத்தில் புதிய வகுப்புக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கான குறிப்பு நூல்களை வாங்கிக்கொடுக்கும் நிலை, அனைத்து பெற்றோருக்கும் இலகுவானதாக அமைவதில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர், துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியிலுள்ள 200 மாணவர்களுக்கு, 50,000 ரூபாய்பெறுமதியான குறிப்புப் நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (12) இடம்பெற்றது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று தற்போது பிரான்சில் வசிக்கும் பாலராஜ் ஜனார்த்தனனின் 12ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

'துளிர்களுக்கு மழையாய்' என்ற கருப்பொருளுடன், முல்லைத்தீவில் செயலாற்றிவரும் 'வெளிச்சம்' அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், அனைத்து புத்தகங்களையும் வழங்கி வைத்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழிருந்து கல்வியைத்தொடரும் மாணவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பாகவே இச்செயற்பாடு அமைகிறது. இதற்கு பங்களித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் லோகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .