2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

2 மீன்பிடித் துறைமுகங்கள் மக்களிடம் கையளிப்பு

Niroshini   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஷ் மதுசங்க   

யாழ். குடாநாட்டில் 26 வருடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த, மயிலட்டி மற்றும் ஊரணி ஆகிய இரண்டு மீன்பிடித் துறைமுகங்களும், அங்கு வதிவிடத்தைக் கொண்டிருந்த மக்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டது.   

நல்லிணக்க வாரத்தில் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகவே, இவ்விரண்டு மீன்பிடி துறைமுகங்களும், கடந்த 14ஆம் திகதியன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இவ்விரு வலயங்களும், அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மீன்பிடி துறைமுகங்களையும் அண்மித்த பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வாழ்கின்றனர் என்றும் மீண்டும் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என்றும் இந்த வைபவத்தில் கலந்துகொண்ட, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.  

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இவ்விரு வலயங்களிலும் மக்களிடம் கையளிக்கப்படுகின்றது. அங்கு மக்கள் மீள்குடியேறி, அங்கிருந்து மீன்பிடித் தொழிலை முன்னெடுக்கலாம் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பான பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மகேஷ் சேனாநாயக்க, மக்களிடத்தில் முன்வைத்தார்.  

அதனையடுத்து, பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மீன்படிப் படகுகள், அவ்விரு மீன்பிடி துறைமுகங்களிலிருந்து அன்றையதினமே, கடலுக்கு விடுவிக்கப்பட்டன.  

பலவருடங்களுக்கு பின்னர் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கின்றமை திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது என்றாலும் வீடுகள் மற்றும் மரங்கள் ஆகியன அழிக்கப்பட்டுள்ளமை வேதனையாய் உள்ளன என்றும் அங்குதிரும்பிய மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X