2025 ஜூலை 16, புதன்கிழமை

'மீன்பிடியை தடையின்றி மேற்கொள்ள வழிசமைக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மீன்பிடித்தொழிலை தங்குதடையின்றி மேற்காள்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி தருமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.ஆனால், இது தொடர்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின்; சமாசத் தலைவர் பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள், வெளிமாவட்ட மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள்,சட்டவிரோத தொழில்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளின் பயன்பாடு உள்ளிட்ட பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் இப்;பகுதி கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,இரணைதீவு கிராமும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அத்துடன் கரையில் இருந்து மூன்று கடல் மைல் தொலைவான பகுதிகளிலேயே தொழில் மேற்கொள்ள முடிகின்றது என்றார்.

மேலும்,கடற்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக எவரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. இதனால் எமது தொழில்கள் முடக்கப்படும் அளவுக்கு சட்டவிரோத தொழில்களும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களும் அதிகரித்துள்ளன.

எனவே,இனியாவது இப்பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கான மீன்பிடித் தொழில்களை தங்கு தடைகளின்றி மேற்கொள்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்ததுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .