2025 ஜூலை 16, புதன்கிழமை

'முன்மாதிரியான ஒப்பந்தக்காரர்களை பாராட்ட வேண்டியது கடமையாகும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழங்காவில் பிரதான பஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை(12)  மாலை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் விஜயம் செய்தார்.

இதன்போது,பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

இலாப நோக்கோடு செயப்பட்டாலும் இவர்கள் போன்ற முன்மாதிரியான ஒப்பந்தக்காரர்கள்  எமது மாகாணத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுடயவர்களாக இருக்கின்றமையால் இவர்களை பாராட்டுவது தமது கடமை எனவும் இதேபோன்று மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து ஒப்பந்தகாரர்களும் தாம் எடுக்கின்ற வேலைகளில் இலாபத்தை மட்டும் நோக்காது நமது மாகாண மக்களுக்கு ஒரு சேவையாகவும் எண்ணி பணிகளில் ஈடுபட்டால் விரைவில் எமது வடக்கு மாகாணம் முன்னேற்றம் அடையும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .