Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 22 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்ட தரப்பினரை மிரட்டியவர்களுக்கு பிணை வழங்குவதற்குரிய அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு இல்லையெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினூடாகவே பிணை விண்ணப்பம் செய்யலாம் எனவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு பெண்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரண்டு பெண்கள் சார்பிலும் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி,
“கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களும் மருத்துவ தேவையுடையவர்கள். இதனால் அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும்” என கோரினார்.
இதற்குப் பதிலளித்த நீதவான்,
“பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் கூட நீதவான் நீதமன்றத்துக்கு இல்லை. பிணை தொடர்பில் நீங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினூடாக விண்ணப்பம் செய்யலாம். இல்லையென்றால் எழுத்து மூலமான விண்ணப்பம் செய்தால், அதனை உரிய முறையில் பரிசீலணை செய்து பிணை வழங்க முடிந்தால் வழங்கலாம். அது வரையில் இரண்டு பெண்களுக்கும் என்ன மருத்துவ உதவி தேவையென்றாலும் அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்வார்” என்றார்.
இதையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களின் உறவினர்கள் தன்னை மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதவான் அவ்வேளை அறிவுறுத்தி இருந்தார். அதற்கமைய, தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம், மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் அவரின் மற்றுமொரு உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .