2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முழங்காவிலுள்ள 5 குளங்களை பெரிதாக்கினால் குடிநீர்ப் பிரச்சினை தீரும்

Niroshini   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

முழங்காவிலுக்கும் பூநகரி பிரதேசத்துக்கும் இடையில் இருக்கும் 5 குளங்களையும் பெரிதாக்கி, கடலுக்கு வீணாகச் செல்லும் நீரை அந்தக் குளங்களில் சேகரித்தால் பூநகரி, யாழ்ப்பாணம் ஆகியவற்றின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை விட இது சிறப்பாக இருக்கும். இதனை நடைமுறைப்படுத்த, வட மாகாண சபை மற்றும் அரசாங்கம் என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X