Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எனது மகன் திரும்ப வருவார் என உறுதிமொழி வழங்கி என்னை ஏமாற்றிவிட்டதாக தாயார் ஒருவர் சாட்சியமளித்தார்.
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கான அமர்வு செவ்வாய்க்கிழமை (15) சங்கானைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
எனது மகன் செல்வம் தெய்வேந்திரன் (கடத்தப்படும் போது 23 வயது), கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி சுற்றிவளைப்பின் போது, மாவடி இராணுவ முகாம் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு உடுவில் இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டார்.
உடுவில் இராணுவ முகாமுக்குச் சென்று கேட்டபோது, கொழும்பு 4ஆம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினர். 4ஆம் மாடியில் சென்று கேட்டபோது, அங்கு அவ்வாறு யாரும் இல்லையெனக் கூறினர்.
இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து மகன் தொடர்பில் தெரிவித்த போது, உடனேயே உடுவில் இராணுவ முகாமுக்கு தொடர்பு கொள்வதாக கூறி தொலை பேசியில் அழைப்பை ஏற்படுத்தி ஒருவரிடம் கதைத்து, உங்கள் மகனை சந்தேகத்தின் பேரில் உடுவில் இராணுவ முகாமில் தடுத்து வைத்து விசாரணை செய்கின்றார்கள், 4 அல்லது 5 நாட்களுக்குள் விடுதலை செய்வார்கள் என கூறி எம்மை அனுப்பி வைத்தார்.
அவர் சொன்ன நாட்கள் கடந்தும், மகன் திரும்பி வராததால் மீதும் டக்ளஸ் தேவனானந்தாவை நேரில் சந்திக்க எத்தனையோ தடவைகள் முயற்சித்தும் நேரில் சந்திக்க முடியாது போனது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .