2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மகள் துஷ்பிரயோகம்; தந்தை கைது

George   / 2017 ஜனவரி 17 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் தவசிக்குளம் பிரதேசத்தில், தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு வருவதாக நேற்று பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார், தந்தையை கைது செய்துள்ளனர்.

இச்சிறுமியின் தாய்  கடந்த வருடம், கணவனை பிரிந்துச் சென்ற நிலையில், தந்தையுடனும் உறவினர்களுடனும் சிறுமி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கல்வி நடவடிக்கைக்காக குறித்த சிறுமியை பெண்கள் விடுதியில் அண்மையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

அதன்போது, தனக்கு நடந்த கொடுமையை விடுதியில் உள்ளவர்களிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, விடுதி பொறுப்பாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X