Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பல எமது மக்களுக்கு நன்மை பயப்பதைவிட தென் பகுதி மக்களுக்கு நன்மை வழங்கும் திட்டங்களாகவே காணப்படுகின்றன என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் இரண்டாவது வரவு-செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் முதலமைச்சரால் இன்று செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மேம்போக்காக நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்ற போதிலும், மறைமுகமாக மாகாண சபைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் பேணுகின்ற நிலையே காணப்படுகின்றது.
அதாவது,மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும் மத்திய அரசாங்கத்தினது நேரடிக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கக் கூடிய வகையிலுமான மறைமுகத்திட்டங்களை அமுல்படுத்த முற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அண்மையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து 'கிராம இராஜ்ஜியம்' எனும் புதிய திட்டத்துக்கான வரைவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற கிராம மற்றும் மாவட்ட மட்டத்திலான குழுக்களே சகல அபிவிருத்திச் செயற்திட்டங்களையும் தீர்மானித்து செயற்படுத்துகின்ற அதிகாரத்தினை கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.
இதில் மாகாண சபைகளைப் புறந்தள்ளி மத்திய அரசாங்கம் தனது நேரடிச் செல்வாக்கை பிரயோகிக்க முற்படுகின்ற ஓர் புதிய வடிவிலான திட்டமாகக் கருத வேண்டியுள்ளது. இவ்வாறு மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விடயத்திலும் தனது பிடியை இறுக்க முற்படுகின்றதே தவிர தளர்த்த முற்படவில்லை.அதிகாரப் பரவலாக்கத்துக்குப் பதில் அதிகார மையமாக்கலையே இன்றைய அரசாங்கம் கடைப்பிடிக்க எத்தனிப்பது போல் தெரிகின்றது.
மத்திய செல்வாக்கை மேம்படுத்தவும் மாகாணத்தைப் புறக்கணிக்கவுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
20 minute ago
24 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
49 minute ago
1 hours ago