2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'மரபுரிமைகளை அழிக்கின்றனர்'

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உலக முதலாளிகளின் கைக்கூலிகளாக செயற்படும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும், அவர்களுக்கு முண்டுகொடுக்கும் அரசுகளும்தான் மரபுரிமைகளை அழிக்கின்றன என தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடாத்த கோரியும், ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ் நல்லூர் பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

நாட்டைப் பறித்தனர். அகதியானோம். நிலத்தைப் பறித்தனர். ஏதிலியானோம். மிச்சசொச்ச மரபுரிமைசார் பண்பாட்டு அடையாளங்களுடன் உலகம் முழுவதும் அலைந்துழல்கின்றோம். இந்த அலைந்துழவில் கசியும் துயரின் வலியை வேறு எவ்வினமும் கடந்திருக்காது என்பதை உலகே அறியும்.

'பீட்டாவின்' பின்னணியில் நின்று இந்திய உபகண்டத்தின் தொல்குடித் தமிழர்களின் மரபுரிமைகளில் ஒன்றான ஏறுதழுவுதல் விளையாட்டை தடைசெய்யவும் தன் நீதிக் கரங்களை அரசு கொஞ்சமும் கூச்சமின்றி பயன்படுத்துகின்றது.

தமிழக கடற்கரைகளிலும், கிராமங்களிலும், வீதிகளிலும் ஒற்றுமையுணர்வோடு கிளர்ந்திருக்கும் எம் சொந்தங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கவே நல்லூரடியில் இணைகிறோம். தமிழகத்தின் அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்களுக்கு தோள்கொடுக்கவே ஈழத்தின் நல்லூரடியில் திரண்டிருக்கிறோம்.

எங்கள் கிளைகள்தான் முறிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர வேர்களல்ல. தமிழ் எனும் ஆணிவேர் மிகப் பலமானது என்பதை உலகின் முன் நினைவுபடுத்துகின்றோம்” என அவர்கள் கூறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X