2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'ரட்நாயக்க எனது மகனையும் மருமகனையும் பிடித்தார்'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

எனது மகன் மற்றும் மகளின் கணவர் ஆகியோரை ரட்நாயக்க தலைமையிலான இராணுவத்தினர் பருத்தித்துறையில் வைத்துப் பிடித்துச் சென்றதாக பருத்தித்துறையைச் சேர்ந்த நடராஜாமூர்த்தி இராஜேஸ்வரி என்பவர் தெரிவித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (14) நடைபெற்றது. இதில் சாட்சியமளித்த தாயார் ஒருவர் இவ்வாறு கூறினார்.

எனது மகனும் மருமகனும் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு பணிக்காகச் சென்றிருந்த போது, பருத்தித்துறையில் வைத்து ரட்நாயக்க தலைமையிலான இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலத்தின் பின்னர், எனது இன்னொரு மகளை வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X