2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'ரவிராஜை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினோம்'

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பேரம்பலம் உட்பட மூவரை தூக்கி கொண்டு ஓடி வந்தார்கள். அவர்கள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது நாம் ரவிராஜை வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் ஏற்றி, காயமடைந்த மூவரையும் ஏற்றிக் கொண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட், வியாழக்கிழமை (01) சாட்சியளித்தார்.

நாரந்தனை இரட்டை படுகொலை வழக்கு தொடர்பில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் 9ஆவது நாளான வியாழக்கிழமை, கண் கட்ட சாட்சிகளில் ஒருவரான ரவிராஜின் மெய் பாதுகாவலர், மன்றில் ஆஜராகி சாட்சியமளித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நாகலிங்கம், சாட்சியை நெறிப்படுத்தியிருந்தார்.

அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,

ஊர்காவற்றுறை வைத்தியசாலை பகுதியில் நாம் சென்று கொண்டிருந்தபோது எம்மை மறித்த சிலர், “முன்னுக்கு அடி விழுகுது. முன்னுக்கு போக வேண்டாம்” என தெரிவித்தனர். இதன்போது வாகனத்திலிருந்து வெளியே வந்த ரவிராஜ், முன்னோக்கி செல்ல முற்பட்டார். நாம் அவரை தடுத்தோம்.

அவரை வாகனத்துக்குள் ஏறுமாறு தெரிவித்தோம். ஆனால் அவர் ஏறமாட்டேன் என அடம்பிடித்தார். இவ்வாறு நாம் முரண்பட்டுக்கொண்டு நின்றபோது பேரம்பலம் உட்பட மூவரை தூக்கி கொண்டு ஓடி வந்தார்கள். அவர்கள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது நாம் ரவிராஜை வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் ஏற்றி காயமடைந்த மூவரையும் ஏற்றிக் கொண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்றோம் என சாட்சியமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X