2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

58 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

George   / 2016 ஜூன் 15 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பிரான்பற்றுப் பகுதியிருந்து சுழிபுரம் பகுதிக்கு 58 லீற்றர் கசிப்பை கொண்டு சென்ற சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை (14) மாலை கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

சுழிபுரம் பகுதியில் பொதிகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் மறித்துச் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, 78 போத்தல்களில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கசிப்பு மீட்கபட்டது.

கைது செய்யப்பட்ட நபர், இளவாலைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர். 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X