2025 ஜூலை 05, சனிக்கிழமை

32 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்;தியர்கள் இல்லை

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்;தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்;துள்ளார்.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்திறப்;பு விழா வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாணத்தில் தற்போது யாழ். போதான வைத்தியசாலை தவிர்ந்த 102 வைத்தியசாலைகள் உள்ளன. இதில் 32 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக வடமாகாண சபை இந்த வைத்தியசாலைகளை மூடவில்லை. ஓய்வு பெற்ற வைத்தியர்கள் 16 பேர் வரையில் ஒப்பந்த அடிப்படையிலும், பல்;கலைக்கழக மருத்துவ படிப்பை முடித்து விட்டு உள்ளக பயிற்சிக்காக இருக்கும் மாணவர்களை கொண்டும் பல வைத்தியசாலைகளை இயக்கி வருகின்றோம். இருந்தும் பல வைத்தியசாலைகளில் பிரச்சனைகள் காணப்படுகின்றன.

கடந்த வாரம் கூட முல்லைத்தீவு நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்;கு நிரந்தர வைத்தியரை நியமிக்;குமாறு அப்பகுதி மக்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் அதற்கு அடுத்தபடியாக முல்லைத்தீவு மாவட்;டத்திலும் சிறுநீரக நோயாளர்;களை அதிகளவில் காணப்;படுகின்றனர். இவ்;வாறு இளவயதில் தொற்றாத நோய்களுக்;;;குள்ளாவோர் தொகை அதிகரித்து காணப்படுகின்;றது.

வடக்கு மாகாண சபையினால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 6 வைத்தியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்;தியர்களை டிசெம்;பர் மாதமளவில் தருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன எமக்கு உறுதியளித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த 5 வருடங்களில் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. மாங்;;குளத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றினையும் கிளிநொச்சியில் நவீன வசதியுடன் கூடிய முதியோர் இல்லம் ஒன்றினையும் அமைக்கவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்' என அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .