2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விபத்துடன் தொடர்புடைய உழவுஇயந்திர சாரதிக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் வெள்ளிக்கிழமை(25) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில்  இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திர சாரதியை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தரை எதிரே வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரம் மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் உத்தியோகத்தரான  கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சிப் பொலிஸார், உழவு இயந்திரத்தை உழவு இயந்திர உரிமையாளரின் வீட்டில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (27) கைப்பற்றினர்.

இதேவேளை,தலைமறைவாகியிருந்த உழவு இயந்திர சாரதியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X