2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வடக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதில் சிக்கல்

Niroshini   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிதாக 65,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கென கோரப்பட்ட நிதியானது அதிகமெனவும் வீடுகளை நிர்மாணிப்பதற்கென குத்தகை நிறுவனங்களைத் தெரிவு செய்த முறை தவறானது எனவும் வடபகுதி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வீடொன்றை நிர்மாணிப்பதற்கென 20 இலட்சம் ரூபாயை விடவும் அதிகளவிலான நிதியைச் செலுத்த இந்து மத மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஒத்துக்கொண்டமையே இக்குழப்பநிலைக்கான காரணம் என சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டிலுள்ள குத்தகை நிறுவனத்தினர், வீடொன்றுக்கு 15 இலட்சம் ரூபாயிலும் குறைந்த தொகையை பெற ஒத்துக்கொண்டுள்ள நிலையில், அதிகளவான நிதியைப் பெற்றுக்கொள்ளும் இந்திய குத்தகை நிறுவனமொன்றை தெரிவு செய்துள்ளமை பாரிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபை உட்பட இக்குத்தகை விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணியை குடியேற்றவாசிகளே பொறுப்பேற்று செய்ய முன்வருகின்ற நிலையில், அதற்கென செலவிடப்படும் நிதியை மாத்திரம் அரசாங்கம் வழங்கினால் போதுமானது என மீள்குடியேற்ற அமைச்சுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

அதனை, நிராகரித்த மீள்குடியேற்ற அமைச்சு, மிக விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு குத்தகை நிறுவனமொன்றுக்கு வழங்குவதே சிறந்தது என வட மாகாண சபைக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X