2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வடமாகாண சபை தீவகத்தை புறக்கணிக்கிறது

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமாகாண சபை தொடர்ந்தும் தீவகத்தைப் புறக்கணித்து வருகின்றது. கவனிப்பாரற்ற தீவகம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (29) நடைபெற்ற போதே மேற்படி விடயம் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

தீவகத்திலுள்ள பாடசாலைகளில் 162 ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. ஏற்கெனவே, இப்பாடசாலைகளுக்கு 100 பேர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 50 பேர் வந்த வேகத்திலேயே தீவகத்தை விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2012ஆம் ஆண்டு முதல் வட மாகாண சபை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கி வருகின்றது.

காரைநகரில் 8 முன்பள்ளிகள் இயங்குகின்றன. அதில் கற்பிக்கும் எந்த ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவு வழங்குவதில்லையென மக்கள் சுட்டிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X