Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
8 வருடங்களுக்கு பின்னர், தனது பிள்ளையைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தை நாடிய தந்தையொருவர் தொடர்பான சம்பவமொன்று, இன்று இடம்பெற்றது.
குறித்த நபர், 8 வருடங்களுக்கு முன்னர், தனது மனைவியையும் பிள்ளையையும் கைவிட்டுச் சென்றுள்ளார். இதன்பின்னர், தற்போது தனது பிள்ளையைச் சந்திக்க அனுமதி கோரி, நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதனை கவனத்தில் எடுத்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால், 8 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த இந்த ஞானோதயம் தொடர்பில் நீதிமன்றம் சந்தேகம் கொண்டார்.
இருப்பினும், பிரதி சனிக்கிழமை தோறும் பிள்ளையை பார்க்க நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.
ஆனால், பிள்ளைக்கு உடல், உள ரீதியாக துன்புறுத்தல் ஏற்படுமாயின், அது தொடர்பில் நீதிமன்றம் கடுமையாக கடவடிக்கை எடுக்கும் என, நீதவான் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago