2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

‘5 - 10 வருடங்களில் போராட்டம் வெடிக்கும்?’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

‘யுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12,000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது குடும்ப சிந்தனையுடன், வாழ்க்கையைக் கொண்டுநத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், அவர்களை மீண்டும் கைது செய்து பிரச்சினை ஏற்படுத்தினால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்குள், மற்றுமொரு போராட்டம் வெடிக்க வேண்டிய நிலமை ஏற்படும்” என்று, வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்தார்.  

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,  

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி குறித்த உண்மைத் தகவல்களை, நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அறிவிக்க வேண்டும். இதன் உண்மைகள் மக்களுக்கு சென்றடைய, அதுவே வழியாகும்.  

இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்தோ அல்லது இணைந்தோ செயற்பட வேண்டியத் தேவை, தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்குக் கிடையாது. ஆனாலும், அவ்வாறு கூட்டமைப்பைச் சார்ந்த சிலர், அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க முற்பட்டால், அதற்கு கூட்டமைப்பு இடமளிக்காது. அத்தகைய விடயங்கள் தொடர்பில், நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X