2025 ஜூலை 19, சனிக்கிழமை

12 வர்த்தகர்களுக்கு 42,000 ரூபாய் அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாவனை அதிகார சபை சட்டத்தை மீறி பொருட்களை உற்பத்தி செய்தமை மற்றும் விற்பனையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் 12 வர்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் திங்கட்கிழமை (04) தீர்ப்பளித்தார்.

மல்லாகம் நீதிமன்றத்துக்குட்பட்ட அச்சுவேலி, சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் கடந்த வாரம் பாவனை அதிகாரசபையின் அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை விலைப்பட்டியலை பாவனையாளர்களுக்கு; காட்சிப்படுத்தாமை மற்றும் நிறை குறைந்த பாணை உற்பத்தி செய்தமை போன்ற குற்றங்களுக்காக 12 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக பாவனை அதிகாரி சபை அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,காலாவதியான பொருட்களை விற்பனை செய்த அச்சுவேலி மற்றும் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களுக்கு தலா 3,000 ரூபாயும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்த தவறிய மூவருக்கு தலா 3,000 ரூபாயும் நிறைகுறைந்த பாணை உற்பத்தி செய்த வெதுப்பக உரிமையாளர்கள் இருவருக்கு தலா 3,000 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகருக்கு 9,000 ரூபாயும் அச்சுவேலி பகுதியைச் சேர்;ந்த இருவருக்கு தலா 3,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X